Sunday, July 29, 2012

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்-லைனில் கட்டணம் செலுத்தும் வசதி

கல்லூரி மாணவரிகள் தங்களது கல்வி கட்டணத்தைச் செலுத்த வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது . ஒரு சில வங்கிகளில் குறிப்பிட்ட நேரத்தில்தான் செலுத்த முடியும்.அதனால்  மாணவர்களின் நேரம் வீணாகிறது.

இதை தவிர்க்கும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் ஆன்-லைன் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இனி மாணவர்கள் 24 மணிநேரமும் கட்டணம் செலுத்தலாம். இந்த சேவையை இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எம். பாசின் தொடக்கி வைத்தார்.

Thursday, July 26, 2012

அம்பத்தூரில் 2 பாலங்களுக்கு அனுமதியா?

அம்பத்தூரில் டி.ஐ சைக்கிள் பகுதியில் ரயில்வே துறை சார்பில் 22 கோடி ரூபாய் மதிப்பில், சாலை மேம்பாலம்
அமைக்கப்பட உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.

இதற்க்கான பனிகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.இதே போல் பழைய M.T.H
சாலையில் சென்னை-திருவள்ளூர் சாலைக்கு குறுக்கே 21 கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாலம் அமைப்பதற்கு
அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

ஏனினும், அம்பத்தூ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இவ்விரு திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக
அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பதே அம்பத்தூர் வாசிகளின் எதிர்பார்ப்பு.

Tuesday, July 17, 2012

ஒரு வரி கவிதை


1) கடவுள் கல்லில் இல்லை, கருணை உள்ளவன் இதயத்தில்.



குரூப் - 2 தேர்வுக்கு இலவச பயிற்சி



தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையத்தால்
நடத்தப்படும் குரூப்-2 தேர்வு வரும் ஆகஸ்ட் 12ம்
தேதி நடத்தப்பகிறது.

இப்போட்டி தேர்வு எழுத விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு
பயிற்சி அளிக்கும் விதமாக இலவச பயிற்சி வகுப்புகள்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம்
மூலம் நடத்தப்பட உள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள்
வருகிற 18ம் (18-July-2012) தேதிக்குள் சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலக 
உதவி இயக்குனரிடம் தங்களது விருப்பத்தை நேரில் தெரிவிக்க
வேண்டும்.

Register your self for Free TNPSC - Group -II training.