நான் விரும்பும் நாளைய இந்தியா.
1)
லஞ்ச ஒழிப்பு
நம் நாட்டில் யாரும் விரும்பி லஞ்சம் தருவது இல்லை. எல்லாம் சரியாக நடந்தால், லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது எல்லோரும் அறிவார்.
இருப்பினும் இந்தியாவின் வேர் முதல் துளிர் வரை பரவியுள்ள லஞ்சத்தை ஒழிக்க சில யோசனைகளை முன் வைக்கிறேன்.
*
லஞ்ச ஒழிப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தினசரி பத்திரிக்கைகள் முலம்
விளம்பரம் செய்யவேண்டும்.
*எல்லாம் அரசு துறைகளும்
வெளிப்படையான அணுகுமுறை கடைபிடிக்க வேண்டும்.
* சாலை பணிகள், பாலம் முதலியவை யாரால், எவ்வளவு செலவு, திட்ட பணிக்காலம் அனைத்து
அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்யவேண்டும்.
* தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர் (குறிப்பாக P.F கணக்கு வைத்திருப்போர்) பெயரை மாநில
வேலைவாய்ப்பு பணி மூப்பு பட்டியலில் இருந்து நிக்கப்படவேண்டும். அப்போதுதான் மாநிலத்தில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதும், உரியவர்களுக்கு வேலையும் நேரத்தில் கிடைக்கும்.
* பள்ளி, கல்லூரி, பல்கலை கழகம் ஆகியவற்றில் கட்டணத்தை வங்கிகளில் கட்டும் முறை வந்தால்,
அதிக கட்டணம் வசுலிபதை அரசுகள் கண்காணிக்க முடியும்.
* எல்லா கடைகளிலும் உள்ள சரக்குகள் எத்தனை என்பதை கடைகளுக்கு முன் பட்டியலிடவேண்டும். இதன் முலம்
பதுக்களை தடுக்கமுடியும்.
* 3 லச்சத்திர்க்கு மேல் நிலபத்திர பதிவு நடந்தால் PAN-Card, Form-16 அவசியமாகக படவேண்டும் -
பினாமிகளை தடுக்க
* தொகுதி மேம்பாடு நிதியை பயன்படுத்தாத அல்லது 50% குறைவாக பயன்படுத்திய MLA, MP பதவிகளை பறிக்க வேண்டும். - தேர்தல் ஆணையம் இதை செய்யவேண்டும்.
* எல்லா அரசு பணிகளில் உள்ள காலியிடத்தையும் 3 மாதத்திர்க்குள் நிறப்பப்பட வேண்டும்.
* ஒருவருக்கு ஒரு P.F Acc. என அறிவிக்கப்படவேண்டும். அதில் உள்ள பணத்தை பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது பணிமுடிவின் போது வழங்கப்படவேண்டும்.
*காவல் துறைக்கு புகார்களை... இனையதளம் முலம் பெருதல் வேண்டும்... இதன் முலம் புகாரின் சரியான நிலவரம் உடனுக்குடன் தெரியவரும்..
2) சுகாதாரம்
* ஒவ்வொரு தெருக்களிலும் ஒரு பொது கழிப்பிடம் அவசியம் அமைதல் வேண்டும்.
* பாக்கெட் / பாட்டில் குடிநீர் விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். சமயங்களில் இளநீர் விலையை விட பாட்டில் குடிநீர் விலை அதிகம்....
* தரமில்லா பாக்கெட் / பாட்டில் குடிநீர் விற்பனையை தடுக்க வேண்டும்.
*