சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்,
தண்ணீர் - 1 ½ டம்ளர்
நெய் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்தூள் - ¼ டீஸ்பூன்
கடலை எண்ணெய் - 6 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன்
பட்டை - 1
லவங்கம் - 6
பிரியாணி இலை - 4
சோம்பு - ½ டீஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 2
பூண்டு - 15
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
சிக்கன் - 1/4 கிலோ
செய்முறை
- பாஸ்மதி அரிசியுடன் எண்ணையை விட்டு தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- பிரஷர் குக்கரில் சிறிது எண்ணெய், சிறிது நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, இலை போட்டு வதக்கவும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு மேலும் வதக்கவும். இஞ்சி பூண்டு அரைத்து வைத்ததை பின்பு சேர்த்துக் கொள்ளவும், வெங்காயம் வதங்கியதும். சிக்கன், மஞ்சள் தூள், சிறிது மிளகாய்த்தூள் உப்பு போட்டு குக்கரில் வதக்கவும்.
- சிக்கன் ஒரு அளவு பதமானதும், அரிசி போட்டு பின்பு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கவும். பிரியாணி ரெடி!!!.