Thursday, September 26, 2019

காரக்குழம்பு

தேவையான பொருள்


  1. எண்ணெய் 4 டீஸ்பூன்,
  2. கடுகு சிறிது அளவு
  3. வெந்தயம் கால் டீஸ்பூன்
  4. புளி ஒரு எலுமிச்சை அளவு
  5. உப்பு ஒரு டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
  7. மிளகாய்தூள் 2 டீஸ்பூன் 
  8. தக்காளி 2 நறுக்கவும்
  9. வெங்காயம் 1 நறுக்கவும்
  10. பூண்டு 10 பல்


செய்முறை
புளியை  சுடுதண்ணீரில்  1 ½ டம்ளர் ஊற்றி, ஊற வைத்து பின்பு கரைத்து
கொள்ளவும், அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் போட்டு கரைத்துக்
கொள்ளவும்.

பின்பு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம் போட்டு
தாளித்து,  தக்காளி, வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி, கரைத்து
வைத்துள்ள புளி குழம்பை ஊற்றி பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
கொதித்த பின் இறக்கவும்.

No comments:

Post a Comment