Monday, December 2, 2019

ஒருதலை காதல்

கண்ணில் ஓவியம் காட்டும்,
உதட்டில் நட்பு பாராட்டும்,
இதயத்தில் ஒளிந்து விளையாடும், இது...

உடல் தேய்ந்த, ஒருதலையாய் நின்ற காதல்,
ஆம், தூக்கம் மறந்து இன்று ஒருதலை நின்ற என் காதல்...

சொன்னால் அது உன்னை சுடுமோ,
கொல்லாமல் இது என்னை விடுமோ,

தூண்டிலில் மாட்டிய மீன்,
மீனவன் தொண்டையில் மாட்டியது போல்....
நான் பட்டை தீட்டிய காதல்,
என்னை பதம் பார்த்திடுமோ....

--சதீஷ் குமார்


No comments:

Post a Comment