குட்டி புறா பறக்குது
வானில் வட்டம் அடிக்குது
சுட்டி புறா பறக்குது
வானில் வட்டம் அடிக்குது
Super man, spider man போல பறக்குது,
குட்டி பாப்பா, ஓடிவா
சுட்டி பாப்பா, ஓடிவா
கையை தட்டி பாடிவா
குட்டி புறா பறக்குது
வானில் வட்டம் அடிக்குது
சுட்டி புறா பறக்குது
வானில் வட்டம் அடிக்குது
Super man, spider man போல பறக்குது,
குட்டி பாப்பா, ஓடிவா
சுட்டி பாப்பா, ஓடிவா
கையை தட்டி பாடிவா
வண்ண மயில் ஆடுது
காண மேகங்கள் கூடுது
வாழ்த்துக் கூறி வானமும்
வெள்ளி காசு வீசுது.
மண்ணின் மனம் அங்கே பரவுது
குளத்தில் நீரும் நிறையிது
தவளை அங்கே குதிக்குது
காட்டின் வளம் கொழிக்குது
வண்ண மயில் ஆடுது
காண மேகங்கள் கூடுது
வாழ்த்துக் கூறி வானமும்
வெள்ளி காசு வீசுது.
பச்சைக் கிளியே வா வா வா !!
வண்ண மயிலே வா வா வா !!
குட்டி முயலே வா வா வா !!
தாவும் அணிலே வா வா வா !!
இன்று எனக்குப் பிறந்தநாள்
வாழ்த்து கூற வா வா வா !!
கோடி இன்பம் கூடவே
ஆடி பாடி மகிழலாம்
துள்ளி குதித்து அனைவரும்
இந்த நாளை கழிக்கலாம்.
பச்சைக் கிளியே வா வா வா !!
வண்ண மயிலே வா வா வா !!
குட்டி முயலே வா வா வா !!
தாவும் அணிலே வா வா வா !!