நான் விரும்பிய பாடல்கள் .......
ஆயர்பாடி மாளிகையில்
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே
தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம்
பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
========================================================
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை!
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை!
ஆடிவா! ஆடிவா! ஆடிவா!
ஆடிவா! ஆடிவா! ஆடிவா!
ஆட பிறந்தவளே ஆடிவா!
புகழ் தேட பிறந்தவளே பாடிவா!
ஆடிவா! ஆடிவா! ஆடிவா!
இடை என்னும் கொடியாட நடமாடிவா!
குழல் இசை கொஞ்சி விளையாட நீயாடிவா!
தடை மீறி போராட சதிராடிவா!
தடை மீறி போராட சதிராடிவா!
செந்தமிழே நீ பகை வென்று முடிசூடவா
ஆடிவா! ஆடிவா! ஆடிவா!
மயிலாட வான்கோழி தடை செய்வதோ!
மாகுயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ !
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ!
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ!
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ!
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ!
புயலுக்கும் நெருப்புக்கும் சிறை போடவோ!
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ!
ஆடிவா! ஆடிவா! ஆடிவா!
================================================
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)
வாழ்வென்பதோ கீதம்..
வளர்;கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..