இந்த தேர்தல் வந்தால் மட்டுமே காங்கிரஸ் என்ற கட்சி ஒன்று தமிழ் நாட்டில் இருக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு (திராவிட கட்சிகளுக்கும்) தெரிய வரும்...பிறகு அவ்வளவு தான்.....
இந்த கட்சி தமிழ் நாட்டில் என்ன செய்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைக்காக எந்த ஒரு போராட்டமும் நடத்தாமல் .... வரும் தேர்தலில் தங்கள் கட்சிக்கு 30+30+30 இடங்கள் வேண்டும் என்று கணக்கு போட்டு தரும் ராகுல் காந்தி ....தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனைகளையும் அதற்க்கான தீர்வையும் பட்டியலிட்டு இருந்தால் ..... அவருக்கு தமிழ்நாட்டில் 100/100 கிடைக்கும் என்ற சிறிய கணக்கு கூட அவருக்கு தெரியவில்லையே .......
கூட்டணி கட்சிகளிடம் தொகுதிக்காக (கை) ஏந்தி நிற்கும் நிலையை எந்த காங்கிரஸ் தலைவர் தான் மாற்றப்போரரோ.....
1) காவிரி நீர் பிரச்சனை
2) சேது சமுத்ரம் திட்டம்
3) முல்லை பெரியார் அணை
4) சென்னைக்கு நிரந்தர குடிநீர்
5) Toll Gate பிரச்சனை
இந்த பிரச்னைக்கு காங்கிரஸ் பதில்தான் என்ன?
ஒரு படத்தில வர வசனம் தான் நியாபகத்துக்கு வருது...
ஒருவர்: "உங்களையே நம்பி இருக்கிற மக்களுக்கு என்ன செய்யப்போரிங்கனு?"
விவேக்: இதுவரைக்கு உங்களுக்கு என்ன செஞ்சேன்
ஒருவர்: ஒன்னும் இல்ல
விவேக்: அது தான் இந்தமக்களுக்கும்னு சொல்வாரு...
வரும் தேர்தலில் காங்கிரசுக்கு 90 தொகுதிகள் கிடைத்து ....90 தொகுதிகளை (கை) பற்றினாலும் .... என்ன செய்யப்போகிறது?
பதில்: "இதுவரைக்கு உங்களுக்கு என்ன செஞ்சேன், இப்போ செய்ய !!!!"